Friday, September 3, 2010

விஜயகாந்தின் ஆங்கில வசனங்கள் ---சிரிக்க மட்டும்

விஜயகாந்த் ரசிகர்கள் தவிர்க்கவும்

MINDBLOWING: VIJAYAKANTH'S Dialogues in English







1) U can study and get any certificates. But u cannot get ur death certificate






2) U may have AIRTEL or BSNL connection but when u sneeze u ll say HUTCH






3 ) U can bcome an engineer if u study in engineering college. U cannot become a president if u study in Presidency College





4 ) U can expect a BUS from a BUS stop ... u cannot expect a FULL from FULL stop





5) A mechanical engineer can bcom a mechanic but a software engineer cannot bcom a software





6 ) U can find tea in teacup. But cannot find world in world cup




7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.






பிடித்திருந்தால் ஒரு குத்து குத்தவும் விஜயகாந்த இல்லைங்க Vote சொன்னேன்

Tuesday, July 27, 2010

பெங்களுரு வாசிகளுக்கு மட்டும்...




நீங்கள் அவசரமாக ரயிலோ அல்லது பேருந்தோ பிடிக்க அல்லது வேறு ஒரு அவசர வெளியாகவோ உங்கள் தெருவில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்க்கு ஓடுகிறீர்கள். அங்கு 5 ஆட்டோகள் நிற்கின்றன. கடவளுக்கு நன்றி சொல்லிவிட்டு ... மஜெஸ்டிக் வருமா ? பதில் ரூ 200 . என்ன? டிராபிக் சார் ....வெறும் 80 ரூ மட்டுமே ஆகும் தூரம் அல்சூர் இருந்து மெஜஸ்டிக்கு. உங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி அடுத்த ஆட்டோவிற்கு தாவி ரயிலை தவற விடகூடாது என்று ரூ 150 க்கு பேரம் முடிகிறது.

இதல என்ன இருக்கு எல்லா இடத்துலயும் நடக்குறது தானே?

நீங்கள் மெயின் ரோட்ல நின்றுகொண்டு போற வர ஆட்டோவை நிறுத்தி நீங்கள் போக வேண்டிய இடத்தை சொல்லி கேட்டால் உங்களை பார்க்காமலே அல்லது பதிலே சொல்லாமலே சென்று விடுவார்கள். இதிலும் அதிர்ஷ்டம் இருந்தால் சார் கொஞ்சம் நிறுத்தி போகவேண்டிய இடத்தை காது கொடுத்து கேட்பார். இடத்தை சொன்னவுடன் ஒரு செகண்ட் யோசிபார் (கூட்டி கழத்தி லாபத்தை) அதுக்கப்புறம் சர்ர்ர்ர்... மறுபடியும் இந்த இடத்தில உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருக்கு கட்டுபடியான ரேட் சொல்லுவர் அப்புறம் என்ன சர்ர்ர்ர்... நரி முகத்தில் முழித்திருந்தால் தான் மீட்டர் ரேட் க்கு வருவார்கள்.

என்னோடிய இந்தா 5 வருட பெங்களுரு வாழ்கை அனுபவத்தில் இவர்களிடம் இருந்து பொறுமையும் சகிப்புதன்மையும் பெற்றுத்தந்தது. ஆனால் இவர்கலோடிய rude behavior குணம் மட்டும் மாறவில்லை....

இதற்கு தீர்வு காணும் முயற்சில்....என்னோடிய ஆதங்கத்தை எப்படி வெளிபடுத்துவது என்று தேடிய முஇர்சியெல் கோரமங்கல RTO ஆபீஸ்ல் காண முடிந்தது....... ஆச்சிர்யம் என்னவென்றல் இந்த சிஸ்டம்மை பற்றி 99.99 % மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறன்

(KA-XX-YY-ZZZZ) ஆட்டோ வாகனத்தின் பதிவு என் குறித்து கொண்டு இங்கே உள்ள முகவரிக்கு
transcom@kar.nic.in அன்னுபிவிடுங்கள்.

பதிவு என் XX தகுந்தாற்போல் எந்த RTO அலுவலகமோ அந்த அலுவலகத்திற்கு மற்றும் தாலுகா அலுவலகத்திற்கும் அனுபிவிடுவர்கள்.
இது மட்டுமின்றி தொலைபேசி வழி புகார் வசதியும் உள்ளது.
ஆட்டோ பதிவு என் குறித்து வைத்து கொண்டு கிழ உள்ள தொலைபேசி இலகங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Vehicle Prefix (KA-XX) Bangalore location Phone number

KA-01 Koramangala 080-25533525
KA-02 Rajajinagar 080-23324104
KA-03 Indiranagar 080-25254310
KA-04 Yeshwantpur 080-23376039
KA-05 Jayanagar 080-26630989
KA-41 Gyanabharthi 080-28602833
KA-50 Yelahanka 080-28561366
KA-51 Electronic City 080-25735522
KA-52 NeelaMangala 08234-285598
KA-53 KR Puram 080-25617951



புகார்களை பெற்றவுடன் அந்த பதிவு உள்ள ஆட்டோ ஒவ்நேர் முகவரிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பிவிடுவார்கள். நோட்டீஸ் கிடைக்க பெற்ற 7 நாட்களுக்குள் அவர்கள் நேரில் ஆஜராகவேண்டும். நேரில் வரதவேர்களின் வாகனத்தை ஒவ்வொரு RTO அலுவலகத்திலும் 10 Inspector of Motor Vehicles, இருப்பார்கள் அவர்கள் வாகனத்தை seize செய்து கொண்டுவந்துவிடுவர்கள்.



ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து 100 ரூ penalty பெறப்படும் (section 200).



மேலும் சில கிழ உள்ள காரணங்கலகுகாக புகார்களை தெரிவிக்கலாம்



* சொல்லும் இடத்திற்கு வர மறுப்பது(எல்லா இடங்களும் அடுங்கும்)

* குடுத்தால் தொகை வசூலிப்பது

* மிட்டர் மேல் கேட்பது

* rough க பேசுவது

* பொதுமக்களை ஏமாற்றுவது (உரை சுற்றிக்கட்டுவது )
* பழ்தன மிட்டர்


ஹெல்ப் லைன் தொலைபேசி - 080-22353785

திங்கள் - சனிகிழமை 10:00 am - 5:30 pm .


ஆடோகரர்களின் புகார்களை தெரிவிக்கவே, recorded voice helpline இருக்கிறது


இதில் ஆச்சிர்யம் என்னவென்றல் 1 லட்சம் ஆட்டோகள் ஓடும் நகரத்தில் வெறும் 5 புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளது.



மக்களின் அறியாமையே இதற்கு காரணம். இந்த சிஸ்டம் செயில்திறேன் மிகவும் குறைவாகவே உள்ளது. தொலைபேசி மற்றும் மின் இணை புகார்களை பெற்றுக்கொண்டு அவைகளை நோட்டீஸ் அக மற்றுவதுற்கு இன்னும் manual ப்ரோசெச்ஸ் அக நடைபெறுகிறது. மிகவும் கொறைவான அரசு அதிகாரிகள் தான் இதை கையாளுகிறார்கள்.

சென்னை வாசிகளின் கொடுமை இதை விட மேல் என்று தெரியும், மறக்காமல் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.
****** போழ்துபோகிற்காக தமிளிஷ் இல் இரண்டு வருட வாசிப்புக்கு பின் இது எந்தன் முதல் பதிவு. என்னோடிய எழுது நடை உடை எதுவும் சரி இல்லை என்று என்னக்கு தெரியும் இருந்தாலும் போருதுகொல்லுங்கள் வேறு வழி இல்லை. என்னை பற்றி தெரியாமல் cable சங்கர் அண்ணே (sorry youth) வேறு நேற்று எழத சொல்லிட்டரு ***** கண்டிப்பாக எழுதி கொள்ளமாட்டேன் information, news இருந்தால் பகிர்ந்து கொள்ளுகிறேன் ****நன்றி ****










Monday, December 7, 2009

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் போலியோ சொட்டு மருந்து!

தமிழகத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 5 வருடமாக ஒரு குழந்தை கூட இந்நோயால் பாதிக்கப்படவில்லை.

போலியோ இல்லாத நிலையை தக்க வைத்துக்கொள்ள ஆண்டுதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்தவர்களுக்கும், அகதிகளாக வந்தவர்களுக்கும் போலியோ சிறப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. வரும் 13ம் தேதியும் சென்னையில் நடக்கிறது.

இந்தவகையில் வரும் ஜனவரி 10, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமையில் சென்னையில் நடந்தது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறுகையில், 'போலியோ சொட்டு மருந்து ஒரு குழந்தைக்கு கொடுக்கவில்லை என்றாலும் மற்ற குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பன்றி காய்ச்சல் போன்றவற்றிற்கு தடுப்பூசி கிடையாது. ஆனால் போலியோவிற்கு தடுப்பூசி உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

உங்கள் வீட்டுக் குழந்தைகள், தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், அறியாதவர்கள் என அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து தருமாறு முடிந்தவரை வலியுறுத்துங்கள், நினைவூட்டுங்கள்.